கோவையில் தக்காளி காய்ச்சல் பரவுவதாக அச்சம்! தைரியம் தருகிறது சுகாதாரத்துறை

0
98

கோவை : கோவையில் தக்காளி காய்ச்சல் நோய் பரவுவது குறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை என தைரியம் அளிக்கிறார், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி.

கோவை : கோவையில் தக்காளி காய்ச்சல் நோய் பரவுவது குறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை என தைரியம் அளிக்கிறார், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி.

தற்போது, கோவையில் உள்ள சில குழந்தைகளையும், தக்காளி காய்ச்சல் தாக்கி வருவதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், தக்காளி காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இது சாதாரண காய்ச்சல் போன்று தான், மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சலுக்கு எடுத்து கொள்ளப்படும் மருந்துகள் போதுமானது. அதை டாக்டர்களின் பரிந்துரைப்படி எடுக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க தேவை இல்லை. கோவை மாவட்டத்தில் பயப்படும் அளவிற்கு பாதிப்பு இல்லாததால், பெற்றோர்கள் அச்சம் அடைய வேண்டாம். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் கண்டறியப்பட்டது. நோய் தாக்கம் கண்காணிக்கப்பட்டு, தேவைப்படும் பட்சத்தில் மாதிரிகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தக்காளி காய்ச்சல், பரவும் தன்மை கொண்டது என்பதால், மற்ற குழந்தைகளுக்கு பரவாதவாறு, பாதிக்கப்பட்ட குழந்தையை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதன் வாயிலாக, இந்த நோயை தடுக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

அறிகுறிகள்…

காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகு மற்றும் பாதங்களில், சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றுதல், பசியின்மை ஆகியவை இதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.