பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை : தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருங்கள்

0
26

கோவை; பா.ஜ., தேர்தல் ஆலோசனைக்கூட்டம், கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.

அகில இந்திய பொறுப்பாளரும், நளின்குமார் கட்டீல் தலைமை தாங்கினார். எட்டு மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் என, 40 பேர் பங்கேற்றனர்.

இது குறித்து, கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது: எட்டு மாவட்டங்களுக்கான மண்டல் தலைவர் நியமனம் குறித்து, ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிளைத்தேர்தல் தற்போது நடந்து வருகிறது. விரைவில் மண்டல் தேர்தல் நடக்க உள்ளது

அதன்பின், மாவட்ட, மாநிலத் தலைவர்கள் தேர்தல் நடக்கும். இந்த தேர்தல்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்குப் பின், 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை துவங்க, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 பேர், பூத் கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, கோவை லோக்சபா பொறுப்பாளர் பாலகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.