அறங்காவலர் குழு தலைவர் தகவல் : கும்பாபிேஷக திருப்பணி ரூ.2 கோடியில்

0
24

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறியதாவது:

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சுற்றுச்சுவர், படித்துறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக மருத்துவ சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 3.15 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. 15 நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணியாளர்கள் குடியிருப்பு, அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அரசுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. கோவில் வளர்ச்சிக்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது, கோவில் கும்பாபிேஷக விழா திருப்பணிகள், 2 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. கோவில் கருவறை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிேஷக விழாவுக்கு, நான்கு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்காக அரசுத்துறைகளுடன் இணைந்து ஆயத்தப்பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. விழாவுக்கு வரும் அனைவரும் பாதுகாப்பாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தின் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கும்பாபிேஷகத்தில், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றுதை கண்டு வழிபட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மூலாலய கும்பாபிேஷகத்துக்கு பின், மாசாணியம்மனை பக்தர்கள் தரிசிக்க தடுப்புகள் அமைத்து, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதில் இருந்து, கோவில் வளர்ச்சிக்கான திட்டங்களை முழு அளவில் செயல்படுத்தி வருகிறோம்

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.