இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம் கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு

0
15

கோவை, டிச. 12: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 1-ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, நாளை (13ம் தேதி) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்வார்கள். இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவை மண்டலம் சார்பில் கார்த்திகை தீபம், பவுர்ணமி மற்றும் வார இறுதிநாட்களை முன்னிட்டு பஸ்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இன்று (12ம் தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமான வழித்தட பஸ்களுடன் கூடுதலாக 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து 14 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.