மாற்று ப்பாதை மறு ஆய்வு எரிவாயு குழாய் பதிக்க

0
14

சோமனூர், டிச.11: சோமனூர் அடுத்த இருகூரிலிருந்து சூலூர் வழியாக முத்தூர் வரை விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சூலூர் விவசாயிகள் நேற்று டெல்லியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி பிஜூ கோபிநாத்தை நேரில் சந்தித்து தங்களது பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது எரிவாயு குழாய் பதிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும், மாற்றுப்பாதையாக நெடுஞ்சாலையில் கொண்டு செல்வதற்கான வரைபடத்தை விவசாயிகள் குழு வழங்கினர். விவசாயிகள் கொடுத்த மாற்றுப்பாதையை மறு ஆய்வு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், உழவர் உழைப்பாளி கட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் விவசாயிகள் கணேசன் முருகேசன், மயில்சாமி, ரவிக்குமார் ரங்கசாமி, சோமசுந்தரம், ராஜேந்திரன், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்