மக்கள் தகவல் தெரிவிக்கலாம் : குடியிருப்பு பகுதியில் காய்ச்சல்

0
12

காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விபரங்களை தனியார் மருத்துவமனைகள் பொது சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தாமல் விடுவதால், நோய் தடுப்பு நடவடிக்கையை விரிவாக முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

இவற்றை களைவதற்கு, தங்கள் சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களே இணையதளம் வாயிலாக தகவல் அளிக்கலாம் என பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் உண்மை தகவல்களை, https://ihip.mohfw.gov.in/#!/ என்ற இணையதள பக்கத்தில் சுய விபரங்களை சமர்ப்பித்து, தங்கள் பகுதியில் உள்ள காய்ச்சல் தகவல்களை பதிவேற்றலாம்.

தேவைப்பட்டால் வசிப்பிடத்தில் மருத்துவ முகாம் அமைத்து, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்; தடுப்பூசி மற்றும் மருந்து வினியோகிக்கப்படும்.

சளி, இருமல், காய்ச்சல், தொண்டை, தலைவலியுடன் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இன்ப்ளூயன்ஸா வகை காய்ச்சல் குறித்து, விரிவான விபரங்கள் மாவட்ட சுகாதாரத்துறைக்கு கிடைப்பதில்லை.

தனியார் மருத்துவமனை விபரங்கள் சமர்ப்பிக்க காலதாமதம், முழுமையாக தகவல்களை தராததால், பொது சுகாதாரத்துறை மக்களின் உதவியை நாடியுள்ளது.

– நமது நிருபர் –