கோவை, டிச. 10: கோவை மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் (பி.எஸ்.என்.எல்.) முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘தொழிற்சங்கங்களின் ஜனநாயக உரிமைகளை தடுக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட வேண்டும்’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. கோவை மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் துணை தலைவர் எஸ்.மோகன் தலைமை தாங்கினார்.
ஏஐடியுசி தேசியக்குழு உறுப்பினர் கே.எம்.செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சி.தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பாலகிருஷ்ணன், எல்.செல்வம், பி.சுப்பிரமணியம், வழக்கறிஞர் ஜி.பி.சக்திவேல், ஆர்.உதயகுமார், கே.வெங்கடாசலம், இ.ஏ.பூபதி, ஏ.ரங்கசாமி மற்றும் பி.எஸ்.என்.எல்., வங்கி, காப்பீடு, மின்வாரியம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.