கோவை, டிச. 10: கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சோனியாகாந்தி எம்.பி., 77வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் மாநில பொதுச்செயலாளர் சரவணகுமார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சி தலைவர் அழகு ஜெயபாலன், கவுன்சிலர்கள் ஏ.எஸ்.சங்கர், நவீன்குமார், காயத்ரி, மாநில நிர்வாகிகள் பச்சைமுத்து, ஐ.என்.டி.யு.சி கோவை செல்வன், சவுந்தரகுமார், பழையூர் செல்வராஜ், ஹரிகரசுதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் ஷோபனா செல்வன், வக்கீல் செந்தில்குமார், ஆர்.கே.ரவி, பாலு யாதவ், ஸ்ரீதரன், இராம.நாகராஜ் பாசமலர் சண்முகம், குணசேகரன், அம்சராஜ், பறக்கும்படை ராஜ்குமார், சந்தோஷ், கோவை ரமேஷ், வெற்றிலை கருப்புசாமி, ராஜமாணிக்கம், அமுல்ராஜ், ஜெர்ரி லூயிஸ், ஜனார்த்தனன், காமராஜ்துல்லா, பார்த்திபன், வக்கீல் சந்தோஷ், சாய்ஸ் சாதிக், கணேசன், மோகன்ராஜ், எப்.சி.ஐ தண்டபாணி, கோவை தாமஸ், தனபால், வெங்கடேஷ், சதீஷ், வின்சென்ட், பிரேம், விஜய்பிரகாஷ், தளபதி ரபீக், தாஸ், வி.கே.எல்.கிருஷ்ணன், தர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், திருச்சி ரோட்டில் உள்ள தர்காவில் சாய்ஸ் சாதிக் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாநகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டர் மில் எல்லை மாரியம்மன் கோயிலில் வார்டு கவுன்சிலர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், மவுனசாமி, ஷேக் அப்துல் காதர், சதீஷ், செந்தில்குமார், ரங்கசாமி, ரகுபதி, விசிஎஸ்.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.