கட்டாஞ்சி மலை விவசாயிகள் அச்சம்: பயிர்களை சேதம் செய்யும் யானைகள்

0
102

மேட்டுப்பாளையம் : கட்டாஞ்சி மலைப்பகுதி அருகில் விளைநிலத்திற்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்த காட்டு யானைகளால், அப்பகுதி மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம்,காரமடை அருகே கட்டாஞ்சி மலைப்பகுதி உள்ளது. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், குட்டிகளுடன் முகா மிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கட்டாஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கணுவாய்பாளையம், சீளியூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகின்றன. மேலும், விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்கின்றன. நேற்று முன்தினம் இரவு, கட்டாஞ்சி மலைப்பகுதியிலிருந்து முன்று காட்டு யானைகள் ஒரு குட்டியுடன் வெளியே வந்து, அருகில் உள்ள விளைநிலத்திற்குள் நுழைய முற்பட்டன.

பின் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை உடைத்து விட்டு, நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதியில் விவசாயிகள்,பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.-