அம்பேத்கர் சிலைக்கு மரியாதை ஹிந்து மக்கள் கட்சி சார்பில்

0
76

கோவை; அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அடையாறில், டாக்டர் அம்பேத்கரின் மணி மண்டபம் உள்ளது. இங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் மரியாதை செலுத்த அனுமதிப்பதில்லை. எனவே, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதிக்க நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த கோர்ட், அர்ஜுன் சம்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்து அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதிக்க, அரசுக்கு அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அடையாறில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு சென்ற அர்ஜுன் சம்பத், அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, செங்கல்பட்டு. மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபாடு செய்து, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்.