கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா துணை மருத்துவ அறிவியல் கல்லுாரியின், 31வது பட்டமளிப்பு விழா, ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் விழாவிற்கு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசுகையில், ” வெற்றியை அடைவதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்,” என்றார்.
விழாவில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். தங்க பதக்கம் வென்ற காயத்ரி செண்பகம், பூஜா, அரின் நட்டானியா, ஆரத்தி, அஞ்சலி, ஸ்வெட்டி குரிகோஷ், அஞ்சலி, ஷைன் , லோகேஸ்வரன் கவுரவிக்கப்பட்டனர். சிறந்த அவுட்கோயிங் மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தி, தையல் நாயகி, நந்தினி ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டனர். ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் ரவி, துணை முதல்வர் கோபால் ராவ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.