மாநில போட்டிக்கு மாணவியர் அணிகள் தகுதி: வருவாய் மாவட்ட ‘பால் பேட்மின்டன்’ போட்டி

0
26

கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த பால் பேட்மின்டன் போட்டியில், முதலிடம் பிடித்த ஜி.ராமசாமி நாயுடு பள்ளி மாணவியர் அணிகள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

பள்ளி கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான, 65வது பாரதியார் தின விளையாட்டு போட்டி, கே.பி.ஆர்., கல்லுாரியில் நடந்தது. பால் பேட்மின்டன் போட்டியில், 14, 17, 19 வயதுக்கட்பட்ட மாணவர்கள் பிரிவில், 10க்கும் மேற்பட்ட அணிகளும், மாணவியர் பிரிவில், 14 அணிகளும் பங்கேற்றன.

பல்வேறு சுற்றுக்களை அடுத்து, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான இறுதிப்போட்டியில், ஜி.ராமசாமி நாயுடு பள்ளியும், கே.ஜி., பள்ளியும் மோதின. இதில், 35-6, 35-7 என்ற புள்ளி கணக்கில் ஜி.ராமசாமி நாயுடு பள்ளி முதலிடம் பிடித்தது.

அதேபோல், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஜி.ராமசாமி நாயுடு பள்ளி, ஈக்விடாஸ் மெட்ரிக் பள்ளியுடன் விளையாடியது.

பரபரப்பான ஆட்டத்தில், 35-30, 30-35, 35-33 என்ற புள்ளி கணக்கில் ஜி.ராமசாமி நாயுடு பள்ளி அணி, வெற்றி பெற்றது.

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இவ்விரு அணி வீரர்களையும், பள்ளி முதல்வர் ரம்யா, உடற்கல்வி இயக்குனர் நித்யராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

அதேபோல், 14 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், ஜி.ராமசாமி நாயுடு அணியினர் முதலிடம் பிடித்தனர்.

17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இந்த அணி இரண்டாம் இடம் பிடித்தது. 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விஷ்ணு, 14 வயதுக்குட்பட்டோர் அணியில் தர்சன் ஆகியோர், சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.