கோவை மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

0
16

கோவை; கோவை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளரான, தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன், நாளை (டிச., 6) ஆய்வு செய்கிறார்.

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, அக்., 29ல் துவங்கி, நவ., 28 வரை நடந்தது. நவ., 16, 17 மற்றும், 23, 24ம் தேதிகளில் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தமுள்ள, 3,177 ஓட்டுச்சாவடிகளிலும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவ்வகையில், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்க, 43 ஆயிரத்து, 166 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்கம் செய்ய, 10 ஆயிரத்து, 848 விண்ணப்பங்கள், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, 38 ஆயிரத்து, 625 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம், 92 ஆயிரத்து, 639 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இப்பணிகளை ஆய்வு செய்ய, கோவை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளரான, தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன், நாளை (டிச., 6) வருகிறார். தவறில்லாத பட்டியல் தயாரிப்பது தொடர்பாக, தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார்.