பொள்ளாச்சி; ‘108’ ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேர்காணலில் தகுதியானவர்கள் பங்கேற்கலாம்.
கோவை மாவட்ட ‘108’ ஆம்புலன்ஸ் அதிகாரிகள் கூறியதாவது: கோவை பூ மார்க்கெட், ‘108’ ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், ஆம்புலன்சில், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்துக்கான நேர்முக தேர்வு, இன்று (4ம் தேதி)நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் என, இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., நர்சிங் மற்றும் ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., படித்திருக்க வேண்டும்.
அல்லது பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி படித்திருக்க வேண்டும். இதற்கான தேர்வு முறையானது, எழுத்து தேர்வு, மருத்துவ உடற்கூறியல் முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை மற்றும் மனித வள துறையின் நேர்முக தேர்வு இடம்பெறும். ஊதியமாக, 15,435 ரூபாய் வழங்கப்படும்.
இதேபோல, டிரைவர் பணியிடத்துக்கு, 24 முதல் 35 வயதுக்குள் இருக்கணும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள்; பேட்ஜ் வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
உயரம், 162.5 செ.மீ.,க்கு குறையாமல் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடத்தப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள், கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும், நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வர வேண்டும். ஊதியமாக, 15,235 ரூபாய் வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு, 73977 24837, 73977 24827, 73974 44147 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.