பார்க் கல்லுாரியில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசளிப்பு

0
12

கோவை; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பார்க் இளம் கண்டுபிடிப்பாளர் உச்சி மாநாடு’ அக்டோபரில் நடந்தது. இதைத்தொடர்ந்து, ஆறு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு,புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, கணியூர் பார்க் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.

கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் துணை பொது மேலாளர் முத்துகுமார், சூலுார் விமானப்படை நிலைய அதிகாரி மற்றும் விங் கமாண்டர் தியாகசுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பார்க் கல்வி குழும நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி அனுஷா, பொது மேலாளர் சதீஷ்குமார் மற்றும் பார்க் பொறியியல் கல்லுாரி முதல்வர் லட்சுமணன் பங்கேற்றனர்.