ஊரக வளர்ச்சித்துறை சங்க நிர்வாகிகள் தேர்வு

0
20

சோமனூர், டிச.4: சூலூரில் ஊரக வளர்ச்சித் துறை சங்க புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஹேமலதா, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்றார். மறைந்த ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வகுமார் மறைவு மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சங்க செயல்பாடுகள் அறிக்கைகள் வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் வட்டார தலைவராக சூரியராஜ், வட்டார செயலாளர் கணேசமூர்த்தி, வட்டார பொருளாளர் லியோமெர்வின், வட்டார துணை தலைவர்கள் வாசுதேவன், சண்முகம், வட்டார இணை செயலாளர்கள் பானுமதி, மாருக்குட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி, மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சாந்தி மற்றும் சண்முகபிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.