அன்னுார்; கெம்பநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் கணேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து தமிழக அரசு அவருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
மேலும் கணேசனின் மகள் விசாலினிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கணேசனின் மனைவி இந்திராணிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.