கோவை : மின் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து, 20 சவரன் நகை, பணம் கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லுார் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 76; ஓய்வு பெற்ற மின் அதிகாரி. அவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தொட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மொபைல் போனில் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே வீடு திரும்பினார். பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது.
சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.