வால்பாறை; வால்பாறையில் குளு குளு சீசன் நிலவுவதால், சுற்றுலாபயணியர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது
வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். ஆழியாறு பூங்கா, சக்தி – தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயிண்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், சுற்றுலாபயணியர் கூட்டம் அதிக அளவில் காணப்படுக்கிறது
இந்நிலையில், அங்கு பரவலாக சாரல்மழை பெய்து வரும் நிலையில், காலை, மாலை நேரத்தில் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. கடுங்குளிரிலும், பனிப்பொழிவிலும் எஸ்டேட் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தற்போது குளு குளு சீசன் நிலவுகிறது. மேலும் அதிகாலை, மாலை நேரங்களில் எஸ்டேட் பகுதியில் சூழ்ந்துள்ள பனிமூட்டத்தையும், வால்பாறையில் குவிந்துள்ள சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.