பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கத்தினர், தர்ணா போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நடந்தது. கிளைச் செயலாளர் மதன் வரவேற்றார்.
மாவட்டத்தலைவர் பாபு தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் சிவசாமி, மாவட்ட தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர். இதில், ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்., 4ஜி மற்றும் 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுப்படுத்த வேண்டும். இரண்டாவது வி.ஆர்.எஸ்., திட்டத்தை கைவிட வேண்டும்; ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். கேசுவல் ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் இரண்டு தவணை பஞ்சப்படி ஆகியவற்றை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.