மேலாண்மை கல்லுாரியில் ஜி.எஸ்.டி., கருத்தரங்கம்

0
38

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லுாரி இயக்குனர் சர்மிளா, தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ ஈஸ்வர் அகாடமி விரிவுரையாளர் பிரவீன்குமார் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, ஜி.எஸ்.டி., யின் அமைப்பு அதன் நடைமுறை செயல்பாடுகள், வரிச்சலுகைகள் தாக்கல் செயல்முறைகள் குறித்து விளக்கிப்பேசினார். குறிப்பாக, கடந்த காலங்களில், மாநில, மத்திய அரசுகள் தனித்தனியே வரி வசூலித்து வந்தன.

அவை ஒவ்வொரு மாநிலத்திற்கு மாறுபட்டு இருந்தன. தற்போது, இரண்டும் சேர்த்து, ஒரே வரியாக வசூலிக்கப்பட்டு, பிரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஒரே வரி அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் சிவஞானசெல்வக்குமார், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.