கலெக்டர் கொடுத்த புத்தகப்பரிசு; வியந்து கேட்ட ஜனாதிபதி முர்மு ‘

0
23

கோவை; நீலகிரி செல்லும் வழியில் கோவை விமானநிலையத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி திரவுபதிமுர்முவிற்கு கலெக்டர் கிராந்திகுமார் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

நான்கு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீலகிரி மாவட்டம் செல்லும் வழியில் கோவை விமானநிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஜனாதிபதிக்கு ‘கோயமுத்துார் பேர்ட்ஸ்’ என்ற புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார்.

அப்போது புத்தகம் குறித்து ஜனாதிபதி கேட்க, கோவைக்கு வசந்த காலங்களில் விருந்தாளிகளாக ஏராளமான பறவைகள் வருகை தரும். குறிப்பாக ஜெர்மனியிலிருந்து ஒயிட் ஸ்ட்ரோக் எனும் செங்கால் நாரை, ஸ்பெயின் நாட்டை சார்ந்த பிளாக் ஸ்ட்ரோக் எனும் கருப்பு நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வந்து குறிப்பிட்ட காலம் தங்கிவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும்.

இதுதவிர வசந்த காலங்களில், 200க்கும் மேற்பட்ட பறவைகள் விருந்தாளிகளாக வருகை தரும் கோவையில் பத்துக்கும் மேற்பட்ட குளங்களும் அதை ஒட்டிய பகுதிகளில் இயற்கை சூழ்ந்த பகுதிகளாகவும் மரங்கள் அடர்ந்து காணப்படும். கோவை அவ்வளவு செழுமையும் குளுமையான நகரம் என்று கோவையை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். அதை ஜனாதிபதி கேட்டு வியப்படைந்தார்.