கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்

0
104

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர உறுப்பினர் சசிதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாடை கட்டி சமையல் கியாஸ் சிலிண்டரை தூக்கி வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கியாஸ் விலை உயர்விற்கு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசு, தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.