காட்டுப்பன்றிகளை விரட்டும் முறை குறித்து செயல்விளக்கம்

0
63

காட்டுப்பன்றிகள்

பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நிலக்கடலை போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காட்டுப்பன்றிகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் பாதிப்பதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக ஆழியாறுக்கு வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் காட்டுப்பன்றிகளை விரட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் காட்டுப்பன்றி விரட்டியை தோட்டங்களில் பயன்படுத்தி அவை வருவதை தடுக்கலாம் என்று செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

காட்டுப்பன்றிகளை விரட்ட நூதன முறை கடைபிடிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக இருந்து வரும் காட்டுப்பன்றியினை கட்டுப்படுத்த கே.வி.கே. விரிஞ்சிபுரத்தில் இருந்து வரவழைத்த காட்டுப்பன்றி விரட்டி குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு திரவத்தை சிறிய பாட்டிலில் அடைத்து, கயிற்றால் தோட்டத்தை சுற்றி கட்ட வேண்டும். அந்த திரவத்தின் வாசனைக்கு காட்டுப்பன்றிகள் வராது.

இதை பயன்படுத்தி ஏற்கனவே காட்டுப்பன்றிகள் வருவது தோட்டங்களில் தடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு அந்த காட்டுப்பன்றி விரட்டி செயல்படும் முறை, எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.