மயக்கவியல் தொழில்நுட்ப ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் https://www.dailythanthi.com/News/State/anesthesiology-technician-vacancies-are-to-be-filled-913153

0
54

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அவரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில்நுட்புனர்கள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் தொழில் நுட்புனர் படிப்பு படித்து அரசு ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற்றோம். படித்து முடிந்து பல வருடங்கள் ஆகியும் பணி வாய்ப்பு வழங்கப்பட வில்லை.

எனவே கொரோனா காலத்தில் பணியாற்றிய மயக்க வியல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். பழைய பாடத்திட்டத்தில் படித்தவர்களையும் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும்.

அரசு ஆஸ்பத்திரிகளில் மயக்கவியல் தொழில்நுட்புனர் என்ற காலி பணியிடத் தை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

கோவை மாவட்ட பொது ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில், கோவை மாவட் டத்தில் பிற மாநிலத்தவர்கள் 60 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்ற னர்.

இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட தாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளியை மூடியதால் பாதிப்பு

கோவை காந்திமாநகரில் மூடப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பெற்றோர் அளித்த மனுவில், காந்திமா நகரில் தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர்.

ஆனால் திடீரென அந்த பள்ளியை கடந்த ஆண்டு மூடினர். அப்போது மாணவர்களை வேறு பள்ளிக ளில் சேர்க்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகம் ஏற்பதாக கூறியது.

ஆனால் அதன்படி நடக்க வில்லை. இதனால் அந்த பள்ளியில் இலவச கல்வி உரிமை சட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டு உள்ளது.

உயிருக்கு ஆபத்து ஏற்படும்

பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், கோவை மதுக்கரை அருகே மலைச்சாமி கோவில் வீதியில் அரசு பட்டா வழங்கிய நிலத்தில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வசித்து வருகி றோம். அங்குள்ள மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு விழும் நிலை உள்ளது. எனவே பாதிப்பு ஏற்படும் முன் அந்த பாறையை உடைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கழிப்பிடத்தை திறக்க வேண்டும்

மதுக்கரை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியினர் கொடுத்த மனுவில், போத்தனூர் செட்டிபாளையம் ெரயில் நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும்.

மதுக்கரை ஒன்றியம் திருமலையாம் பாளையம் பேரூராட்சி 10-வது வார்டில் கழிப்பிடம் கட்டி முடித்து 2 ஆண்டு ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. அதை திறக்க வேண்டும். மயிலேறி பாளையம் முதல் நேரு நகர் வழித் தடத்தில் மீண்டும் அரசு பஸ் விட வேண்டும். கோவை -பொள் ளாச்சி நெடுஞ்சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் சாலையை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மகளிர் குழு கூட்டமைப்பு

பொள்ளாச்சி காளியாபுரம் பஞ்சாயத்து மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பினர் அளித்த மனுவில், பஞ்சாயத்து கணக்காளரை மாற்றக் கூடாது. பஞ்சாயத்து தலைவர் எங்களை அவமரியாதை செய்யும் வகையில் செயல்படுகிறார். மேலும் எங்களுக்கு கிடைக்கும் உதவிகளை தடுப்பது போன்ற செயலில் ஈடுபடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.