தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள்

0
70

தமிழக சட்டக்கல்வி இயக்குனரால் அமைக்கப்பட்ட மாநில மாதிரி நீதிமன்ற போட்டி குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை அரசு சட்ட கல்லூரியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடைபெற்றது. 4 சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட் டிகளில் தமிழக அரசு சட்ட கல்லூரிகள் 15, தனியார் சட்ட கல்லூரிகள் 5 என மொத்தம் 20 கல்லூரிகள் கலந்து கொண்டன.

இறுதிப்போட்டிக்கு திருச்சி அரசு சட்ட கல்லூரியும், செங்கல் பட்டு அரசு சட்ட கல்லூரியும் தேர்வானது. இதில் அதிக புள்ளிகள் பெற்று திருச்சி அரசு சட்டக் கல்லூரி வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டக் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

விழாவில் சட்டக் கல்லூரி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.