நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்துவிவசாயிகளுக்கு செயல் விளக்கம்

0
51

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நறுமணப் பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் துறை சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நகரில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் துறையின் பேராசிரியர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெ.சுரேஷ், தென்னையில் ஊடுபயிராக நறுமணப் பயிர்களை வளர்க்கும் முறை பற்றி விளக்கினார். கோழிக்கோட்டில் அமைந்துள்ள இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கே. கண்டியண்ணன் நறுமணப்பயிர்களான மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கிராம்பு, ஜாதிக்காய் சாகுபடியில் உள்ள உயர் தொழில்நுட்பங்கள் பற்றி பேசினார். நறுமணப் பயிர்கள் வாரியத்தின் உதவி இயக்குனர் கனகதிலீபன் தரமான ஏற்றுமதியில் நறுமணப்பயிர்கள் வாரியத்தின் பங்கு பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஷ்வரி, முன்னோடி விவசாயி சோமசுந்தரம் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.