அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகை

0
59

எம்.எல்.ஏ.வை முற்றுகை

உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி இ.பி.நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சாலை அமைக்க நேற்று பூமிபூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டனர். மேலும் வஞ்சியம்மன் லே-அவுட், பாஸ்கர் நகர் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சாலையை சீரமைக்க பூமிபூஜை போடப்பட்டது. ஆனால் அதன்பிறகு பணிகள் தொடங்கவில்லை.

சீரமைக்க நடவடிக்கை

சாலை பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பலமுறை சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எம்.எல்.ஏ. அந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பழுதடைந்த சாலையை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.