முன்கூட்டியே காபி செடிகளில் பூத்த பூக்கள்

0
63

வால்பாறை பகுதியில் 4 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் காபி செடிகள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த காபி செடிகளில் பிப்ரவரி மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கி செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பூக்கள் காய்களாக மாறி பழுத்து காபி பழங்களாகிவிடும். பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை காபி பழங்கள் பறிக்கப்படும். இந்த காபி பழங்களின் தோல்கள் உறிக்கப்பட்டு காபி கொட்டைகளாக மாற்றி காபி தோட்ட நிர்வாகங்கள் காபி கொட்டைகளை விற்று வருகின்றன. தற்போது வால்பாறை பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் உள்ள காபி செடிகளில் காபி பூக்கள் பூத்துள்ளது. உரிய பருவத்தில் பூக்கள் பூத்துள்ளதால் வருகிற ஆண்டில் காபி உற்பத்தி அதிகரிக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.