ஆக்கிரமிப்புகள் அகற்றம்-நெடுஞ்சாலைத்துைற அதிகாரிகள் நடவடிக்கை

0
53

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வால்பாறை நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள், மழை நீர் வடிகால் குழாய் பதிக்கும் பணி, தடுப்பு சுவர் கட்டும் பணி, புதிதாக சாலை அமைக்கும் பணிக்காகவும் போக்குவரத்து நெரிசல், நடைபாதையில் நடப்பவர்களுக்கு போதிய இட வசதி போன்ற காரணங்களுக்காக நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கடைகளை 2 நாட்களாக அகற்றினர்.

தாங்களாகவே அகற்றவேண்டும்

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், வருவாய் துறை சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாலையின் அளவுகள் பொது மக்களுக்கு குறித்து காட்டப்பட்டு வருகிறது.அந்த எல்லையை தாண்டி கடை நடத்துபவர்கள் தாங்களாகவே முன் வந்து இரண்டு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதனடிப்படையில் வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் இருந்து வால்பாறையின் நுழைவு வாயில் பகுதியான பிஏபி காலனி வரை சாலையின் இரண்டு பக்கத்திலும் எல்லையை குறிக்கும் பணியை செய்து வருகிறோம் என்றனர்.