மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு தடுக்கிறது

0
57

மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் மத்திய அரசு தடுக்கிறது என்று காரமடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

பொதுக்கூட்டம்

சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் கோவையை அடுத்த காரமடை கார் ஸ்டாண்டு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை யில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி. தமிழகத்தில் தற்போது நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு வீட்டில் 4 பெண் குழந்தைகள் இருந்தாலும் ரூ.1000 நிதியுதவி அளித்தது சமூகநீதி. பெண் படிக்கிறாள். முன்னேறுகிறாள் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் விளைவு. இது சமுதாய மறுமலர்ச்சி ஆகும்.

ஆன்லைன் சூதாட்டம்

திராவிடர் கழகம் தொடர்ந்து அறிவுறுத்தியதன் விளைவாக ஆன்லைன் சூதாட்டம் குறித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சில பல ஓட்டைகளுடன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க முடியாமல் போனது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு ஓட்டையில்லாமல் போடப்பட்ட தீர்மானத்தில் கையெழுத் திடாமல் கவர்னர் ரவி காலம் தாழ்த்தி வருகிறார். இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது. இது மக்களை அவமதிக்கும் செயல்.

சேதுசமுத்திர திட்டம்

தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்து போட்டி அரசியலை ஒன்றிய அரசு செய்கிறது. சேது சமுத்திர கால் வாய் திட்டம் முழுமையாக நிறைவேறினால் எரிபொருள், நேரம், செலவு மிச்சமாகும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும். ஆனால் சேது சமுத்திர திட்ட பாதையில் வெறும் 23 கிமீ தொலை விற்கு இருந்த பவளப்பாறைகளை ராமர் பாலம் என கூறி உச்சநீதி மன்றத்தில் அப்போதைய அ.தி.மு.க. அரசு தடையாணை பெற்றது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.