காய்கறிகளின் விலை குறைந்தது

0
62

பெரியநாயக்கன்பாளையம் வாரச்சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்தது.

இதனால் அவற்றின் விலை குைறந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.35க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.30- க்கும், ரூ.80- க்கு விற்ற சின்னவெங்காயம் ரூ.50-க்கும், ரூ.40க்கு விற்ற தக்காளி ரூ.32-க்கும் நேற்று விற்பனை ஆனது.

மற்ற காய்கறிகளின் விலை (கிலோவில்) வருமாறு:-கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், அவரைக்காய், பீர்க்கங்காய், பாகற் காய் ஆகியவை ரூ.48, வெண்டைக்காய்- ரூ.68, உருளைக்கிழங்கு, புடலங்காய், சேனைக்கிழங்கு -ரூ.40 பீட்ரூட்- ரூ.36, சுரைக்காய்- ரூ.38, இஞ்சி-ரூ.74, பச்சைமிளகாய்- ரூ.46,

பூசணிக்காய்- ரூ.27, அரசாணிக்காய்- ரூ.20. ஒரு தேங்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20-க்கு விற்கப்பட்டது. வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலைகள் குறைந்ததாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.