கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், அரசு கலைக் கல்லூரி, கிளப் ரோடு சந்திப்பு தீவுத்திடல் ரவுண்டானா பகுதியில் அலங்கார செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களை கவரும் வகையில் இரவு நேரங்களில் பல வர்ணங்களில் நீரூற்றில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இதை அந்த வழியாக செல்பவர்கள் பார்த்து ரசித்தபடி செல்கின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 44 அடி சுற்றளவில் அமைக்கப்பட்ட நீரூற்றில் 30 அடி உயரத்திற்கு தண் ணீர் மேலே செல்லும்.
மேலும் இங்கு தோட்டம் அமைக்க ஏற் பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ரேஸ்கோர்ஸ் மாடல் ரோடு பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது என்றனர்.