பஞ்சாப் மாநிலம் ஷாக்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையது தொடர்பாக தகவல் கிடைத்ததும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸ் அங்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநில போலீசாருடன் மாணவர்கள் இருக்கும் கல்லூரி விடுதியில் சோதனையிட்டது. அப்போது காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்களை கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைது செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.