பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

0
122
புதுடெல்லி,
ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வரிசை முறையை, கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து கடந்த 3–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் வன்முறை வெடித்தது.  கோவில் நிர்வாக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த வன்முறையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் போது 3–ந் தேதி நடந்த வன்முறை சம்பவத்தின் போது ஏராளமான போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் கோவிலுக்குள் சென்றதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் செல்லக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, கோவிலில் நடந்த வன்முறை தொடர்பாக 47 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக ஒடிசா மாநில அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.