அரசு பள்ளி மாணவி சாதனை

0
65

திருமலையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில,் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கலைச்செல்வி நுண்கலை பிரிவில் மணல் சிற்பம் வரைந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை தலைமை ஆசிரியை ராதிகா, துணை தலைமை ஆசிரியை மேகனா, ஆசிரியர்கள் கவுசல்யா, ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.