எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம்

0
82

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாமின் தொடக்கவிழா பொள்ளாச்சி தனியார் பள்ளியில் நடந்தது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சார்மிளா, யோகேஸ்வரி, வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் ஸ்வப்னா ஆகியோர் பயிற்சி முகாமினை துவக்கி வைத்தனர். மூன்றாம் பருவத்துக்கான பாடப்பகுதி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை, ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் ராஜன் பார்வையிட்டார். முதன்மை கல்வி அலுவலர் பூபதி, பயிற்சி முகாமினை ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை, மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் சரவணக்குமார், ஹரிக்கண்ணன், மரியா, அனிதா, தாமரைக்கண்ணன், பஞ்சலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாட்டினை, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுகன்யா செய்து இருந்தார். அதன் பின் ஆசிரியர்கள் கூறியதாவது:-

மூன்றாம் பருவம் எண்ணும், எழுத்தும் குறித்து பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மொத்தம் 105 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.