சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது

0
124
பீஜிங்,
ரஷியாவிடம் இருந்து இந்தியா ‘எஸ்–400’ ரக ஏவுகணைகளை வாங்கவுள்ள நிலையில் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது. சீனாவின் செங்டு விமான தொழில் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் போன்ற கட்டமைப்பை கொண்டது. இந்த ஆளில்லா விமானங்களை சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவாகி உள்ளது. இருப்பினும் இருதரப்பு இடையிலான இந்த ஆயுத வர்த்தகம் தொடர்பான விலை வெளியாகவில்லை. சீனாவிடம் இருந்து பெருமளவு விமானங்களை வாங்குவதை பாகிஸ்தானின் விமானப்படை உறுதி செய்துள்ளது.
சீனாவின் விங் லூங் 2 விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதன்முதலாக விண்ணில் பறந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்த விமானங்கள் முதன்முதலாக விண்ணில் பறப்பதற்கு முன்பே அவற்றை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எந்தெந்த நாடுகள் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானுக்கு சீனா 48 ஆளில்லா விமானங்களை வினியோகம் செய்யப்போவது இதுவே முதல் முறையாகும்.