வரும் டிசம்பர் 16ஆம் தேதி சாய்னாவுக்கு டும் டும் டும்

0
227

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது காதலர் காஷ்யப்பை வரும் டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Saina Nehwa

பேட்மிண்டனில் இந்தியாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். கோபிசந்த் அகாடமியில் தன்னுடன் பயிற்சி பெற்ற சக வீரரான பாருபள்ளி காஷ்யப்பை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சாய்னா நேவால் காதலித்து வந்துள்ளார்.

விளையாட்டில் முன்னேற வேண்டும் என்றும், இந்தியாவிற்காக பல பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பதற்காக, தங்களது திருமணத்தை இருவரும் தள்ளிப் போட்டு வந்தனர். தற்போது, இரு வீட்டாரின் சம்மதத்துடன் வருகிற டிசம்பர் மாதம் 16ஆம் தேதி, சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப் திருமணம் நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது.

திருமணம் குறித்து பேட்டியளித்த சாய்னா நேவால், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வருகிறோம். ஒருவர் மற்றொருவரை நன்கு அறிவோம். ஒருவர் மற்றவரிடம் எளிதாக பேச முடியும். எனவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்’ என்றார்.