கோவை எஸ்.எஸ். குளம் ஒன்றியம் கோவில்பாளையம், குரும்ப பாளையம் பகுதியில் கோவில்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காபிகடை பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப் படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், அவர்கள் சுண்டக்காபாளையத்தை சேர்ந்த பூபாலன், சுப்பிர மணி என்பதும், அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே பூபாலன் தப்பி ஓடி விட்டார். சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா, 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.