ஈரோட்டை சேர்ந்தவர் சுவேதா ஸ்ரீ (வயது 25). இவர் ஈரோட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் சென்றார். பின்னர் அவர் அதே ரெயிலில் ஈரோடு திரும்பினார். ஈரோடு ரெயில் நிலையத்தில் இறங்கியதும் அவர் அணிந்து இருந்த நகையை காணவில்லை. உடனே அவர் ரெயிலுக்கு சென்று தேடி பார்க்க முயன்றபோது ரெயில் புறப்பட்டு சென்றது.
இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார். உடனே அவர்கள் கோவை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ரெயில் கோவை வந்ததும், போலீசார் சுவேதா ஸ்ரீ பயணம் செய்த பெட்டிக்குள் ஏறி சோதனை செய்தபோது ஒரு பவுன் நகை அங்கு கிடந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணுக்கு தகவல் தெரிவித்து அவரை கோவை வரவழைத்து நகையை அவரிடம் ஒப்படைத்தனர்.நகையை வாங்கிய அவர் மகிழ்ச்சியடைந்து, போலீசாருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றார்.