ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

0
76

ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 ஊராட்சி பகுதிகளிலும் ஓட்டு வீடுகள், தகர வீடுகள், குடிசை வீடுகள் குறித்து வருகிற 12-ந் தேதி கணக்கெடுப்பை தொடங்கி இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் பெறப்படுவது, சாக்கடை கால்வாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.