அரசு பள்ளியில் கணித உபகரணங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி

0
50

கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாரதி அறக்கட்டளை மற்றும் ஆழியாறு அறக்கட்டளை சார்பில் ‘திறன் மேம்பாட்டு மையம்’ தொடங்கப்பட்டு, மாணவிகளுக்கு ரோபோடிக்கல், போட்டோ ஷாப், சி-ப்ளஸ் மற்றும் தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டி மையத்தின் ஓர் அங்கமாக, மாணவிகளின் கணித பாடத்தில் உள்ள கருத்துகளை எளிதில் புரிந்து கொண்டு, கணித பயிற்சிகளை செய்து கற்றுக் கொள்ளும் வகையில் கணித உபகரணங்கள் பண்ணாரி தொழில் நுட்பக் கல்லூரியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. 14 வகையான கணிதக் கருவிகளைக் கொண்டு கணித ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார் கூறியதாவது:- பள்ளி மாணவிகளின் நலனுக்காக ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் ‘கணித பயிற்சி ஆய்வகம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 வகையான கணித உபகரணங்களை கொண்டு மாணவிகளுக்கு கற்பிப்பது குறித்து பண்ணாரி தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, பிதாகரஸ் தேற்றம், அல்ஜீப்ரா, எண்ணியல், அளவையியல், முக்கோணவியல், பின்னங்கள், வடிவியல் மற்றும் பகுப்பாய்வு வடிவியல் போன்ற அடிப்படை கணித விதிகளை மாணவிகள் எளிமையாக ‘செய்து கற்றல்’ வாயிலாக கற்று தெளிவுறும் வகையில் கணித உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.