கிணத்துக்கடவில் உள்ள சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவலோக நாதருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலோகநாதருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சைச்சாறு, விபூதி, பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவலோகநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.முன்னதாக கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். இதேபோல் கிணத்துக்கடவு மலைமீது உள்ள பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் உள்ள காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.