இனிமே டீ குடிக்கறதுக்கு முன்னாடி இதையெல்லாம் நியாபகம் வச்சுகங்க

0
250

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் தேடுவது தேநீரைதான். ஏனெனில் தேநீர் என்பது நமது வாழ்வுடன் இணைந்த ஒரு பொருளாகும். நமது மூளை சோர்வடையும் போதெல்லாம் நாம் தேடிச்செல்வது தேநீரைதான். தேநீர் குடிப்பது நமது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை வழங்கினாலும் அதில் சில பக்கவிளைவுகளும் இருக்கிறது.

things to remember before drinking teaஒருநாளைக்கு 2 முதல் 10 தேநீர் வரை கூட குடிப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். டீ குடிப்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் அதனை சில தப்பான முறைகளில் குடிக்கும்போது அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் டீ குடிக்கையில் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.

டீயை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்டீயை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள் தேநீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது அதனை ஆபத்தான பொருளாக மாற்றக்கூடும். தேநீரை அதிகமாக சூடுபடுத்துவது அதன் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது மேலும் டீயின் உண்மையான சுவையை குறைக்கிறது. எனவே எப்பொழுதும் புதியதாக தயாரிக்கப்பட்ட தேநீரை குடிப்பதே நல்லதாக கருதப்படுகிறது.
வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள்வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். வெறும் வயிற்றில் டீ குடிப்பது அவ்வளவு நல்லதல்ல. வெறும் வயிற்றில் டீ குடிப்பது உங்கள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிப்பதுடன் பசியின்மையை அதிகரிக்கிறது. வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது அதனுடன் பிஸ்கட் அல்லது வேறு எதாவது வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்

முதலில் குடிக்க வேண்டாம் தினமும் காலையில் முதலில் குடிப்பது தேனீராகத்தான் இருக்கும். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பசியை குறைக்கும். இறுதியில் இதன் விளைவு எடை அதிகரிப்புதான்.

அதிக சூடாக குடிக்கக்கூடாது பல்வேறு ஆய்வுகளின் படி அதிக சூடான டீ குடிக்கும்போது அது உங்கள் வாய், தொண்டை, உணவுக்குழாயை பாதிப்பதோடு வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. ஆய்வுகளின் படி 69 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் டீ குடிப்பது உங்கள் வயிற்றில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சாப்பாட்டிற்கு முன் குடிக்கக்கூடாது சாப்பாட்டிற்கு முன் டீ குடிக்கும்போது அது உணவின் சுவையை குறைப்பதுடன் உணவில் இருந்து உங்களுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்களையும் கிடைக்கவிடாமல் தடுக்கிறது.

அளவு முக்கியமானது நீங்கள் ஒருநாளைக்கு 2 அல்லது 3 கப் தேநீர் குடிப்பவராக இருந்தால் அது மிகவும் சரியான ஒன்று. இந்த அளவு எப்பொழுதும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். காஃபைன் அதிகளவு எடுத்துக்கொள்ளும்போது அது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனால் சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்ககோளாறுகள், நரம்பு மண்டல பிரச்சினைகள், பதட்டம், சீரில்லாத இதயத்துடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதல்ல தேநீரில் உள்ள காஃபைன் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும், சிலசமயம் கருக்கலைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் இது அளவுக்கதிகமாக குடிக்கும்போதுதான். எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கும் தேநீரின் அளவை குறைக்கவேண்டியது அவசியம்.
அதிக டீத்தூள் வேண்டும்
அதிக டீத்தூள் வேண்டும் டீயை அதிகநேரம் கொதிக்க வைக்காதீர்கள் அதேநேரம் அதிக டீத்தூளையும் போடவேண்டாம். தலைவலி குணமாகத்தான் பெரும்பாலும் அனைவரும் டீ குடிக்கின்றனர். ஆனால் அதிக அளவு டீத்தூள் போட்டு டீ குடிப்பதே தலைவலியை உருவாக்கும். மேலும் நீர்சத்து குறைவு, குமட்டல், பதட்டம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
இதய பிரச்சினைகள்
இதய பிரச்சினைகள் இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக டீ குடிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அதிகளவு காஃபைன் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. இதனால் பல இதய கோளாறுகள் உருவாகலாம்.