தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் அடையாளம் தெரிந்தது

0
164

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காருக்குள் இருந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். அவருக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வெடிபொருட்கள், மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி னார்கள். இது தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது நவாஸ், முகமது பெரோஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது.

ரகசியமாக கண்காணிப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள் குறித்து ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

சந்தேக நபர்களின் முகநூல், இ-மெயில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தை ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் சந்தேக நபர்கள் எந்த வகையான சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்?, அதில் அவர்கள் குறிப்பிடுவது என்ன என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

4 பேர் அடையாளம் தெரிந்தது

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபர்களின் சமூக வலைத்தளம், அவர்கள் பயன்படுத்தும் செயலிகளை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்க ளுடன் தொடர்பு உள்ள 4 பேர் அடையாளம் தெரிந்து உள்ளது.

அவர்கள் எந்த வகையில் தொடர்பு வைத்து உள்ளனர்?, எந்த செயலியை பயன்படுத்தி பேசுகிறார்கள்? எது தொடர்பாக தகவல்க ளை பரிமாற்றம் செய்கிறார்கள்?, ஆடியோ காலில் பேசுகிறார்களா? அல்லது வீடியோ காலில் பேசுகிறார்களா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.

ஐ.எம்.இ.ஐ. எண்

சில செயலிகள் மூலம் பேசிவிட்டு அதை அழித்துவிட்டால் அவர் கள் யாரிடம் என்ன பேசினார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. எனவே சந்தேக நபர்களின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அவர்களின் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களுடன் பேச ஐ.எம்.ஓ. என்ற செயலியைதான் ஜமேஜா முபின் பயன்படுத்தி உள்ளார். அதில் பேசிவிட்டு அழித்தால் யாரிடம் என்ன பேசினார்கள் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனவே இந்த 4 பேரும் இதுபோன்ற செயலியை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.