சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
219

வால்பாறையில் உள்ள டூரிஸ்ட் கார் டிரைவர் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் பல்றேு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது தற்காலிக அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.

தற்காலிக அனுமதி சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த வாகனங்களில் பயணிகளை அழைத்துச் சென்று அரசுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.