சர்வீஸ் சாலை மூடப்பட்டதால், பொதுமக்கள் அவதி

0
93

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் உள்ளது. இங்கு தினசரி காய்கறி சந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக அண்ணாநகர், பகவதி பாளையம், சாலைப்புதூர், அப்துல் கலாம் நகர், செம்மொழி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை செல்கிறது. நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி முடிவடையாததால், இந்த சாலை குறுகலாக உள்ளது. இதன் கீழ் அம்பராம்பாளையம் திட்ட குடிநீர் குழாய் மற்றும் குறிச்சி-குனியமுத்தூர் திட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய்களில், டி.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழி ஏற்பட்டு சாலை பழுதடைந்தது. நேற்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனால் சர்வீஸ் சாலை மூடப்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்ல முடியாமல் மேம்பாலத்தில் சென்றன. மேலும் பஸ்சில் வந்த பொதுமக்களை சாலைப்புதூர் பெட்ரோல் பங்க், அரசம்பாளையம் பிரிவில் இறக்கி விட்டனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர்.