காதலியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

0
89

கோவை குறிச்சி சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் (24) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இருவீட்டாரும் இவர்களது காதலை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். வருகிற 20-ந் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் இளம்பெண்ணின் தாயாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தாயாரை அழைத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். ஹரிபிரசாத்தும் அங்கு வந்தார்.

அப்போது காதலிக்கும், ஹரி பிரசாத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிப்பிரசாத் காதலியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார், இளம்பெண்ணின் காதலன் ஹரிபிரசாத் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்..