தொடர்மழை காரணமாக பட்டறையில் இருப்பு வைத்த 5 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் அழுகின. அவற்றுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சின்னவெங்காயம் சாகுபடி
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தீத்திப்பாளை யம், தென்னமநல்லூர், தென்கரை, பூலுவபட்டி, மத்வராயபுரம், செம்மேடு, தேவராயபுரம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும்.
அது ஆகஸ்டு, செப்டம்பர் மாத இறுதியில் அறுவடைக்கு தயாராகிவிடும். 60-ல் இருந்து 65 நாள் பயிரான சின்னவெங்காயத்தை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.
பட்டறையில் வைத்தனர்
ஆனால் அறுவடை நேரத்தில் சின்னவெங்காயத்துக்கு சரியான விலை கிடைக்க வில்லை. எனவே கடந்த செப்டம்பர் மாத இறுதியில் விவசாயிகள் தங்கள் விளைநிலத்திலேயே பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்தனர்.
உரிய விலை கிடைக்கும் போது சின்னவெங்காயத்தை விற்பனை செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பட்டறையில் இருப்பு வைத்து இருந்த சின்ன வெங்காயம் அழுக தொடங்கின. தற்போது சின்ன வெங்காயத்துக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வருகிறது. ஆனால் மழை காரணமாக இருப்பு வைத்த சின்னவெங்காயம் அழுகி இருப்பதால் உரிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு துணைத்தலைவர் பெரியசாமி கூறியதாவது:-
5 ஆயிரம் டன் அழுகியது
அறுவடை நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து சின்னவெங்காயம் கிலோ ரூ.10 வரை தான் கொள்முதல் செய்யப்பட்டது.
எனவே போதிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தொண்டா முத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பட் டறைகள் அமைத்து சின்னவெங்காயம் இருப்பு வைக்கப்பட்டது.
இதில் ஒரு பட்டறையில் 5 டன் முதல் 7 டன் வரை சின்னவெங் காயம் இருப்பு வைக்கப்பட்டது. பட்டறைகளில் அதிகபட்சமாக 4 மாதங்கள் வரை சின்னவெங்காயத்தை இருப்பு வைக்கலாம்.
தற்போதும் விவசாயிகளிடம் இருந்து சின்னவெங்காயத்தை கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரையே வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார் கள். மழை காரணமாக பட்டறையில் இருந்த 50 சதவீதத்துக்கும் அதிகமான அதாவது சுமார் 5 ஆயிரம் டன் சின்னவெங்காயம் அழுகி விட்டது.
நஷ்டஈடு
காலநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். எனவே வேளாண் அதி காரிகள் உரிய ஆய்வு செய்து எந்த வகையான சின்ன வெங்காய விதையை சாகுபடி செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.